தனுஷ் மனுசனே இல்லை…செல்வராகவன் ஓபன் டாக்…சோகத்தில் ரசிகர்கள்..!

Author: Selvan
23 November 2024, 4:13 pm

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ்.இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருந்து வருகின்றனர்.

தனுஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.அவரை பற்றி பல சர்ச்சைகள் வந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார்.

Selvaraghavan on Dhanush dedication

செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.இப்போதும் ரசிகர்கள் இவரை பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவன்,புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகத்தினை கேட்டு வருகின்றனர்.

தனுஷ் இயக்கிய 50 வது படமான ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருப்பார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் தனுஷ் குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்ற கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் சொல்லியிருப்பார்.

இதையும் படியுங்க: என்னுடைய முதல் காதலி சமந்தா…வெளிப்படையாக சொன்ன இளம் நடிகர்..!

அதில் “தனுஷின் கடின உழைப்பைப் பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது.ரொம்ப ராட்சசத்தனமாக உழைக்கிறார்.இரவு பகல் என தூங்காமல் ஓடுகிறார்”.இதனை பார்க்கும் போது சில சமயம் எனக்கு பொறாமையாக இருக்கிறது.நம்மளால இப்பிடி முடியவில்லை என்று தோணும் என்று கூறியிருப்பார்.

Dhanush hard work inspires Selvaraghavan

இவருடைய இந்த பதில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.செல்வராகவன் தற்போது சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 156

    0

    0