குஷி படத்தில் ஜோதிகாவின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா…ரகசியத்தை உடைத்த எஸ் ஜே சூர்யா..!

Author: Selvan
10 January 2025, 12:59 pm

எஸ் ஜே சூர்யாவின் குடும்ப பாசம்

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என பல விதமான திறமைகளை கையில் வைத்துக்கொண்டு நடிப்பு அரக்கனாக இருப்பவர் எஸ் ஜே சூர்யா.இவர் ஆரம்பத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்பு இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

அந்த வகையில் நடிகர் அஜித்தின் வாலி திரைப்படத்தை எடுத்து வெற்றி கொடுத்த பிறகு குஷி,நானி,நியூ,அன்பே அன்பே என பல படங்களை இயக்கினார்.இவர் அதன்பின்பு பட இயக்குவதை விட்டுவிட்டு ஹீரோவாக நடித்து வந்தார்.ஆனால் மக்கள் இவரை ஹீரோவாக கொண்டாடவில்லை.அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு இறைவி,மெர்சல்,மாநாடு,டான்,வாரிசு என பல படங்களில் நெகட்டிவ் ரோலில் தன்னுடைய அசுர நடிப்பை வெளிப்படுத்தி அமோக வரவேற்பை பெற்றார்.

இதையும் படியுங்க: 2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!

இந்த நிலையில் குஷி படத்தில் ஜோதிகாவுக்கு ஏன் செல்வி என்ற செல்ல பெயர் வைத்துள்ளார் என்ற தகவலை ஒரு பழைய பேட்டியில் கூறிருப்பார்.குஷி படத்தில் ஜோதிகாவின் பெயர் ஜெனிஃபர்,ஆனால் விஜயகுமார் அவரை செல்லமாக செல்வி தான் கூப்பிடுவார்.அவர் அப்படி கூப்புடுவதற்கு காரணம் எஸ் ஜே சூர்யாவின் அப்பா அவருடைய அக்காவை வீட்டில் அப்படி தான் கூப்பிடுவாராம்.இதனால் நடிகை ஜோதிகாவுக்கு தன்னுடைய அக்கா பாசத்தால் செல்வி என பெயர் சூட்டியுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?