‘மைக் மோகன்’ படம் ரிலீஸ் செய்ய மூத்த நடிகர்கள் முட்டுக்கட்டை? அதிர்ச்சி தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2023, 6:31 pm

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளில் பிஸியாக நடித்து குறுகிய காலத்திலேயே பிரபல நடிகராக உயர்ந்தார்.

மோகன் படங்கள் என்றால் ஞாபகம் வருவது அவர் படத்தில் பேசும் மென்மையான குரல். இதற்காகவே பல ரசிகர் கூட்டம் இவருக்கு இருந்தார்கள். ஆனால் அது அவரின் நிஜ குரல் இல்லை. இவர் படங்களுக்கு டப் செய்தவர் அவரின் நண்பர் சுரேந்தர்.

“மோகன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கு காரணம் என்னுடைய குரல் தான்” என்று சுரேந்தர் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைதொடரந்து சுரேந்தர், நடிகர் மோகன் படங்களுக்கு டப் செய்வது நிறுத்திவிட்டார்.

இதன் பின் வெளிவந்த மோகனின் படங்கள் தோல்வியை சந்தித்தது. மோகன் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் தமிழ் சினிமாவை விட்டு நீங்கி விட்டார். இதற்கு பின்னணியில் தமிழ் சினிமாவின் அன்றைய உச்ச நட்சத்திரங்கள்தான் காரணம் என கூறப்பட்டாலும், மோகனின் தொடர் தோல்வியே காரணம் என கூறப்படுகிறது.

மீண்டும் திரைத்துறையில் கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பூ, யோகி பாபு நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஷட்டிங் பணிகள் முடிந்த நிலையில், தற்போது நடிகர் மோகனுக்கு யார் டப் செய்ய போகிறார் என கேள்வி எழுத்துள்ளது.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 674

    1

    1