கோடிக்கணக்கில் சம்பாதிச்சும் செந்தில் அதுல வீக்கா?.. சீக்ரெட் சொன்ன மனைவி..!
Author: Vignesh8 June 2024, 10:42 am
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக செந்தில் உடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடித்து விடுவார்கள்.
அவர்கள் என்ன தான் நட்பாக பழகிவந்த போதும் சில புரிதல் இல்லாததால் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில் நீ இல்லாமலே நான் தனியாக நடித்தே பெரிய ஆள் ஆகுவேன் என கூற கவுண்டமணியும் சரி இனிமே அவனை என் படத்தில் போடாதீங்க தனியாவே நடிக்கிறேன் என சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் அவர்கள் தனித்தனியே நடித்த படங்களுக்கு செந்திலுக்கு மட்டும் அதிகம் வரவேற்பு கிடைத்ததாம் ஆனால், கவுண்டமணியால் தனியாக ஹிட் அடிக்கமுடியவில்லை.
மேலும் படிக்க: பிக்பாஸ் தாமரையா இது?.. கணவருடன் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பியாச்சாம்; மொத்தமாக மாறிட்டாங்களே..!
அதுமட்டும் அல்லாமல் ரசிகர்களும் சேர்ந்து நடிப்பதை தான் அதிகம் விரும்பினார்களாம். அதனால் மீண்டும் ஈகோவை விட்டுவிட்டு ஜோடியாக சேர்ந்து படம் நடித்தார்களாம். இந்த ஜோடி எப்போது நடித்தாலும் ஒன்றாக சேர்ந்தே நடிப்போம். தனிப்பட்ட சண்டையெல்லாம் நடிப்புல வேண்டாம் என முடிவெடுத்தார்களாம் .
மேலும் படிக்க: சொகுசு கப்பலில் பேச்சிலர் பார்ட்டி.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம் எங்கே, எப்போது நடக்கப் போகுது தெரியுமா?..
செந்திலின் சினிமா பயணத்தில் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது, மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து நடித்த வருகிறார். இந்த சமயத்தில், அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட செந்தில் மனைவி எனது கணவர் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவர் பணம் விஷயத்தில் கொஞ்சம் வீக். சொல்லப்போனால், அவருக்கு பணத்தை சரியாக என்ன கூட தெரியாது. அத்தனையும் நான் தான் கவனிப்பேன். அதனால், திருமணம் முடிந்ததும் அவரது அப்பா என்னிடம் அவன் பண விஷயத்தில் வீக். அதனால், நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அதில், இருந்து சம்பளம் மற்ற வருமானம் என அனைத்தையும் நானே கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால், யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும் சம்பளத்தை பாதியை வைத்துக்கொண்டு மீதியை என்னிடம் கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.