கணவரின் மரணத்தை ஆராய்ச்சி பண்ணாதீங்க.. எமோஷனலான சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகபிரியா..!

Author: Vignesh
25 January 2024, 3:51 pm

நாதஸ்வரம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார்.

sruthi shanmuga priya -updatenews360

கடந்த ஆண்டு பாடிபில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

sruthi shanmuga priya -updatenews360

திருமணம் ஆகி இருவரும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு பிரச்சினையால் மரணம் அடைந்தார்.

sruthi shanmuga priya -updatenews360

சமீபத்தில் தன் கணவருடன் இணைந்து ஒரு விளம்பர வீடியோவை எமோஷனலாக ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்த நிலையில், அவரது கணவர் மரணம் சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது.

இந்நிலையில், ஸ்ருதி சண்முகப்பிரியா அளித்த பேட்டியில் அரவிந்த் மரணத்தை பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மரணத்தை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும் இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதனால், தான் அவரின் இறுதிச் சடங்குகள் முடிந்தும் கூட ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டேன். ஒரு நாள் இரவு அரவிந்தின் புகைப்படத்தை பார்த்ததும் எனக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி எல்லாம் ஏன் நடந்தது என்று நினைத்து பல கோடி முறை அழுதிருக்கிறேன் என எமோஷனலாக பேசியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 298

    0

    0