இது தான் திவ்யாவின் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.. ஆதாரங்களை வெளியிட்டு அர்ணவ் பேட்டி..!

‘பல்லக்கி’ எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனிடையே, புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருந்தார்.

கேளடி கண்மணி’ சீரியலை தொடர்ந்து நடிகை திவ்யா மற்றும் அர்ணவ் பிரபலமானார்கள். நடிகை திவ்யா மகராசி, செவ்வந்தி சீரியலிலும் நடித்துள்ளார். அர்ணவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

இருவரும் நட்பாக பழகி வந்தநிலையில், கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. ஒரே வீட்டிலும் வாழத் தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்த இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே, கணவர் அர்ணவ் தன்னை தாக்கியதாக கூறி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டார். மேலும், திவ்யா அளித்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அர்ணவ் கூறியதாவது:-

நடிகை திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அர்ணவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று, ஆதாரமாக தனது செல்போனில் உள்ள போட்டோக்களை காண்பித்தார்.

பல முறை நடிகை திவ்யா தற்கொலை செய்து கொள்வேன் என கைகளை கத்தியால் கிழித்துக் கொண்டு தன்னை மிரட்டி உள்ளதாகவும், குழந்தை இருப்பது தெரியாது தனது அக்காவின் குழந்தை என்று திவ்யா கூறியதாகவும், திவ்யா விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியிருந்த நிலையில், காதலித்தது 5 ஆண்டுகளாக சேர்ந்து இருந்தது எல்லாம் உண்மை தான். ஆனால், திருமணத்திற்காக விவாகரத்து பேப்பரை கேட்டபோது தான் இந்த ஜனவரியில் தான் விவாகரத்தாகி உள்ளதே தெரிந்தது.

மேலும் திவ்யாவுக்கு, தன் மீது வீண் சந்தேகம் என்றும், செல்லம்மா சீரியல் நடிகை முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னை சேர்த்து வைத்து பேசுகிறார், சந்தேகப்படுகிறார், தவறாக புரிந்து கொண்டு தினமும், அந்த நடிகையையும் என்னையும் அசிங்கமாக பேசி மனரீதியாக துன்புறுத்துகிறார்.

திவ்யாவின் தேவையில்லாத சந்தேகமே இந்த பிரச்சனைக்கு முழுக்காரணம் என்றும், எல்லா பிரச்சனையை தாண்டியும் எனக்கு திவ்யாவுடன் சேர்ந்து வாழவே ஆசை என அர்னவ் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

1 hour ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

2 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

2 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

3 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

3 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

4 hours ago

This website uses cookies.