அப்பாவுக்காக Pray பண்ணிக்கோங்க.. சீரியல் நடிகர் நேத்ரனுக்கு இப்படி ஒரு நோயா?..(Video)

Author: Vignesh
22 July 2024, 5:58 pm

சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நேத்ரன். இவர் கிட்டதட்ட சின்னத்திரையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இவர் தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரும் பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேத்திரன் தீபாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் அபிநயா சமீபத்தில் வெளியான கனா காணும் காலங்களில் நடித்திருந்தார். அபிநயா அவ்வப்போது, தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருப்பார். இந்த நிலையில், அபிநயா தனது இன்ஸ்டாகிராமில் எனக்கு இதை எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. கொஞ்சம் வாரமாவே ஹாஸ்பிடல்ல இருக்காரு, இந்த பாசிட்டிவ் அவரை சீக்கிரம் சரியாக்கும்னு நம்புகிறேன் என்று அந்த வீடியோவில் பேசி இருந்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!