11 வருஷ காதல்.. சமந்தாவுக்கு ரூட் போட்ட சீரியல் நடிகர்.. காதல் பரிசோடு வெளியான கியூட் வீடியோ..!

Author: Vignesh
24 August 2023, 11:30 am

மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha - updatenews360

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் அவர் படங்களில் நடித்து வந்ததால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து மார்க்கெட் இழந்தார்.

இதனால் உடல் நிலையில் முழு அக்கறை செலுத்தி சிகிச்சை பெற்று பரிபூரணமாக குணமடைந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு வருகிறேன் என கூறி ஒரு வருடம் இடைவெளி விடுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்த பிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறார். மேலும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சில தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டார். சமந்தாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.

தொடர்ந்து அவர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திக்கொண்டே குஷி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடித்த போது விஜய் தேவர்கொண்டாவுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு காதலாக மாறி யுள்ளதாக கிசு கிசு செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா அமெரிக்காவுக்கு மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சை எடுக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடரில் நடித்த பிரதோஷ் அண்மையில் சமந்தாவை அழகிய பரிசுடன் நேரில் சந்தித்துள்ளார். அவர் தான் வாங்கிய பரிசை கொடுத்து தனது காதலியும் வெளிப்படுத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பிரதோஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 380

    0

    0