நடிகர் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம், சிறுத்தை சிவா இயக்கத்தில், நவம்பர் 14ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம், ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.
வெளியான முதல் நாளிலிருந்தே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த இப்படம், சில திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையை இழந்தது. இதற்கிடையில், சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள், “கங்குவா” படத்தை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா, “கங்குவா” குறித்து நேர்மறை விமர்சனம் வெளியிட்டார்.
ஜோதிகாவின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களும், கடுமையாக விமர்சித்தவர்களும் உள்ளனர். குறிப்பாக, சுசித்ரா உள்ளிட்ட சில பிரபலங்கள் அவரைப் பார்த்து விமர்சனங்களை வெளியிட்டனர்.
இதேபோல், சீரியல் நடிகர் ரவியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சூர்யா-ஜோதிகாவை கடுமையாக விமர்சித்ததோடு, சூர்யாவின் கடந்த கருத்துகளை எடுத்துக்காட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்க : தனுஷ் வாழ்க்கையில் புகுந்த நயன்தாரா.. தூண்டில் போட்டு தூக்கிய துணை இயக்குநர்!
“சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க மும்பைக்கு சென்றனர். தமிழ்நாட்டில் தரமான கல்வி இல்லை என அவர்கள் கூறினார்கள். உங்களது குழந்தைகள் மட்டும் உயர்தர கல்வி பெற வேண்டும், ஆனால் இங்கு உள்ள மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொண்டால், அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள்,” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “சூர்யா படங்களை நாங்கள் தொடர்ந்து புறக்கணிப்போம். எங்களால் முடிந்ததை செய்ய முடிந்தவரை செய்வோம். சவால் விடுகிறேன், உங்களால் என்ன செய்ய முடிந்தாலும் செய்து பாருங்கள்,” என அவர் கடுமையான தொனியில் பேசியுள்ளார்.
இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, இரு தரப்பிலும் வாதங்கள் வெடித்துவருகின்றன.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.