விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 1:20 pm
பிரபலங்கள் சக நடிகர்கள், நடிகைகள் திடீர் காதலில் விழுந்து திருமணம் செய்வதும், விவாகரத்து பெறுவதும் சினிமா உலகத்தில் சகஜமாக மாறியுள்ளது.
சீரியல் நடிகையை பிரிந்தார் நடிகர் ஈஸ்வர்
அப்படி எத்தனையோ பிரபலங்கள் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு அலைந்து வரும் நிலையல், சீரியல் நடிகர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு சீரியல் நடிகர் ஈஸ்வர் சக நடிகையான ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரேவதி என்ற மகளும் உள்ளார்.
இதையும் படியுங்க : பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.. எல்லா மொழியிலும் பிண்றாரே..!!
இதற்கிடையில் ஈஸ்வருக்கு சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பு உள்ளது என குண்டை தூக்கி போட்டார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீயை பிரிந்து வாழ்ந்து வந்தார். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டு படியேறினர்.
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக நடந்த இந்த வழக்கில் போது விவாகரத்து கிடைத்துவிட்டதாக சந்தோஷமாக கூறுகிறார் நடிகர் ஈஸ்வர்.