ஃபோட்டோ ஷூட் முடிந்தது; வேற லெவல் லுக்கில் புதிய சீரியலில் ‘ராஜா ராணி’ பிரபலம்.. அவரே வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
12 October 2022, 7:15 pm

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடித்தார் ஆல்யா மானசா. முதலில் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

ராஜா ராணி என்ற தொடரில் ஆல்யா மானசாவுக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராஜா ராணி தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Rajarani_updatenews60

ராஜா ராணி 2 தொடரில் இருந்து தனது இரண்டாவது பிரசவத்திற்காக நடிப்பை நிறுத்திய ஆல்யா மானசா இப்போது அடுத்து சீரியலில் நடிக்க தயாராகியுள்ளார்.

தற்போது தனது யூடியூப் பக்கத்தில் நடிகை ஆல்யா மானசா அடுத்த சீரியல் கமிட்டாகிவிட்டதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்று கூறி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இப்போது அவர் இன்ஸ்டாவில் முடியை புதிய கலரிங் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு தனது இந்த லுக் பிடித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!