வீட்டில் விசேஷம்.. ஓ இதான் மேட்டரா? ஒருவழியாக போட்டோவுடன் குட் நியூஸை சொன்ன ஆல்யா மானசா..!

Author: Vignesh
18 July 2024, 3:18 pm

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி பழைய ஆல்வாக மாறி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்காக ஆலியா தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். 50 கிலோ உடல் எடை கொண்டிருந்த ஆலியா மானசா 16 கிலோவாக உடல் எடையை குறைத்து ஆளே ஸ்லிம் ஆக மாறிவிட்டாராம்.

இந்த நிலையில், இன்றைய தினம் கார்த்திக் சஞ்சீவி விற்கு பிறந்தநாள். பிறந்தநாள் ஸ்பெஷலாக ஆல்யாவின் பெற்றோர்கள் அவருடைய வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படங்களையும் ஆல்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தாமதமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 236

    0

    0