சின்னத்திரைக்கு அறிமுகம் சின்னத்திரையில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளின் ஒருவரான நடிகை ஆயிஷா, முதன் முதலாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பொன்மகள் வந்தாள்” என்ற சீரியலில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சீரியல் இயக்குநருடன் ஏற்பட்ட சின்ன பிரச்சனைக் காரணமாக சீரியலை விட்டு இடையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் மாயா என்ற சீரியலிலும் நடித்தார். ஆனால் இந்த சீரியல் அவருக்கென ஒரு இடத்தை கொடுக்கவில்லை. மூன்றாவது சீரியலாக மற்றுமொரு தொலைக்காட்சியில் “சத்யா” சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார். அதையடுத்து பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்த ஆயிஷா, வீட்டிற்கு சென்று முதல் வாரத்திலே அசல் கோளாறுவுடன் சண்டையிட்டுக் கொண்டு, மனமுடைந்து “பிக் பாஸை விட்டு போக வேண்டும்” என அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.
இவரின் நடவடிக்கை இயல்பானதாக இருந்தாலும், சக போட்டியாளராக வந்த பிரபலங்கள் பிடிக்கவில்லை. இதனால் ஆயிஷாவை சில இடங்களில் மட்டம் தட்டியுள்ளார்கள். இதனை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் “பிக் பாஸ் ஓவியாவை போல் முயற்சி செய்கிறார் ஆயிஷா” என கலாய்த்து வந்தார்கள். இதனை தொடர்ந்து மனம் மாறி பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்து, ராமுடன் சேர்ந்து கேமரா முன் நின்று அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை பார்த்து மக்கள் அந்த வாரமே டபுள் எவிக்ஷனில் குறைவான வாக்குகள் கொடுத்துவெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இதன் இடையே ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவகாரத்தாகிவிட்டது என ஒருவர் கொடுத்த பேட்டி அந்த நேரத்தில் வைரல் ஆனது. ஆயிஷா உடன் காதலில் இருந்ததாக கூறி ஒரு நபர் பேட்டி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், ஆயிஷா இதை பற்றி எதுவுமே பேசாமல் இருந்தார். பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஹரன் ரெட்டி என்ற தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.
சில நாட்கள் கழித்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்கள். அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தற்போது தனது சமூகவலைத்தளத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார். இதனால் தன் காதலரை திருமணத்திற்கு முன்னரே பிரிந்துவிட்டாரா? ஆயீஷா என எல்லோரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது குறித்து ஆயிஷா எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
This website uses cookies.