என் புருஷனை நானே கொன்னுட்டேன்…? இது தான் நடந்துச்சு சீரியல் நடிகை வேதனை!

Author:
22 August 2024, 4:45 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் சீரியல் நடிகை பானுமதி. இவர் தற்போது இவர் நம்ம வீட்டு பொண்ணு, சின்ன மருமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். அண்மையில் தான் சீரியல் நடிகை ரிஹானா உடன் இவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து ரிஹானா கேட்டதற்கு பானுமதி தக்க பதிலடி கொடுத்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அடுத்ததாக தற்போது நடிகை ஷகிலாவின் பேட்டியில் கலந்து கொண்ட சீரியல் நடிகை பானுமதி.. கணவர் குறித்தும் கணவரின் மரணம் மற்றும் குழந்தைகளை பற்றிய கேள்விக்கு மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதாவது எனக்கு இரண்டு மகன்கள் இருக்காங்க. என்னோட அம்மா என்னோட சகோதரியோடு தான் இருக்காங்க. இப்படி ஒரு குடும்பம் எனக்கு இருக்கிறது அப்படின்னு யாருக்குமே நான் இதுவரைக்கும் ஷேர் பண்ணதே கிடையாது. என்னோட கணவர் ஒரு டான்சர். இந்த கல்யாணம் எப்படி நடந்தது அப்படின்னு கூட எனக்கு தெரியாது .

நான் அவ்வளவு சின்ன வயசிலே கல்யாணம் பண்ணிட்டேன். ஒரு நாள் என்னை பார்த்து பேசினார். நான் கல்யாணம் பண்ணும் போது எனக்கு 15 வயசு அவருக்கு 25 வயசு தான். எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட 10 வயசு வித்தியாசம் என்னோட வீட்ல வந்து பேசினாங்க. பத்து வருஷம் அவரோட சேர்ந்து நான் வாழ்ந்து இருக்கேன்.இதனிடையே என்னுடைய கணவர் திடீரென மஞ்சள் காமாலை நோயால் மரணம் அடைந்துவிட்டார்.

அவர் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மிகவும் அவதிப்படுவார். அதுக்கு காரணம் அடிக்கடி குடிச்சிட்டு இந்த நிலைமைக்கு ஆளாகிட்டாரு. அவர் குடிச்சிட்டு போயிட்டாரு… ஆனால் இப்போ நான்தான் கஷ்டப்பட்டு இருக்கேன். அவரோட தரப்பிலிருந்து எனக்கு எந்த ஒரு சப்போர்ட்டும் கிடையாது. என்னோட கணவரை நான் தான் கொன்னுட்டேன் அப்படின்னு பல பேர் என்ன திட்டினாங்க.

கடைசி வரைக்கும் என்னோட கணவருக்காக நான் போராடினேன். அவர் உயிரை காப்பாற்ற நான் நிறைய முயற்சிகள் எடுத்தேன். அது எனக்கும் என்னுடைய கணவருக்கு மட்டும் தான் தெரியும். அவர் இறந்த பிறகு என்னுடைய குழந்தைகளுக்காக நான் இப்ப வாழ்ந்துட்டு இருக்கேன்.

என்னுடைய பையன் என்ஜினியரிங் படிக்கிறான் என்னுடைய பையனை பற்றி வெளியில் சொல்லவே நான் ரொம்ப பயந்தேன். எனக்கு கணவர் இல்ல… குழந்தைகளை வளர்க்கணும் பாதுகாப்பான முறையில் அப்படிங்கற ஒரு எண்ணம் தான் என்ன சுத்தி சூழ்ந்து கொண்டே இருந்தது என மிகவும் எமோஷ்னலாக பானுமதி ஷகிலாவின் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 347

    0

    0