கோர்ட்டில் தேம்பி அழுத்த VJ சித்ராவின் கணவர்… வைரலாகும் வீடியோ!

Author:
10 August 2024, 3:35 pm

பிரபல சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அவருடைய அறையில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு சடலமாக மீட்டு எடுக்கப்பட்டார். இந்த விஷயம் அப்போது பெரும் பூதாகரமாக வெடித்து பரபரப்பாக பேசப்பட்டது.

chithra-updatenews360

இவரது தற்கொலைக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து துரித விசாரணை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது அவரோடு இருந்த அவருடைய கணவர் ஹேம்நாத் தான் விஜே சித்ரா தற்கொலைக்கு காரணமான மிக முக்கிய நபராக பார்க்கப்பட்டார். மேலும் அவர் மீது வழக்குப்பாய்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து குற்றம் சுமத்தப்பட்ட விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத் கொலையாளி என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கோர்ட் என்று அவரை நிரபராதி என கூறி விடுதலை செய்திருக்கிறது. சித்ரா இறப்புக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த தீர்ப்பு குறித்து பேசிய நீதிபதி ரேவதி, சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசார் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் ஹேம்நாத் நிரபராதி எனக்கூறி விடுதலை செய்கிறோம் என கூறினார். இந்த தீர்ப்பு வெளியானதும் ஹேம்நாத் நீதிமன்றத்திலேயே கலங்கி கதறி அழுதார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் “இவர் கொலையாளி கிடையாது… கொலைக்கு காரணமான நபர்” என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 230

    0

    0