எதிர்பாராத விபத்து.. விஜய் டிவி சீரியல் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!
Author: Vignesh14 February 2024, 7:02 pm
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்ற மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா சிரியலின் படப்பிடிப்பில் ஸ்கூட்டியில் பிரேக் பிடிக்காமல் போக அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாம். தனது இன்ஸ்டாவில் என்னுடைய முதல் விபத்து என பதிவு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.