10 வருட ஏக்கம்…. 42 வயசில் இரட்டை குழந்தை பெற்ற நடிகை உருக்கம்!

Author:
26 July 2024, 3:02 pm

ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் ஜூலி என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் விசாலாட்சி. இவரது நிஜ பெயர் விசாலாட்சி தான் என்றாலும் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வருவதற்கு ஜூலி தான். அந்த அளவுக்கு இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது .

முன்னதாக சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டர்களின் நடித்து வந்த அவர் டான்சராகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

இவருக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். குழந்தை இல்லாதது குறித்து நாங்கள் மிகுந்த மன வருத்தப்பட்டு இருந்தோம் என பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார் .

முன்னதாக எங்களுக்கு இரண்டு முறை குழந்தை நின்றது. இரண்டு முறையும் அபாசன் ஆகிவிட்டது. அதன் பின்னர் பல பேர் எங்களுக்கு குழந்தை இல்லை என்பது குறித்து விமர்சிப்பார்கள். ஆனால், நாங்கள் அதை பெரிதாக மனதில் எடுத்துக் கொள்ளாமல் வாழ்க்கையில் தொடர்ந்து வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தோம் .

குழந்தை இல்லாத சமயத்தில் என்னுடன் சேர்ந்து எனது கணவரும் மிகுந்த வேதனைப்படுவார். எனக்கு முதல் குழந்தை 45 நாட்களில் கலைந்து விட்டது. அதன் பிறகு இரண்டாவது குழந்தை கருப்பையில் இல்லை ட்யூபில் இருக்கிறது எனக் கூறிய அபார்ஷன் செய்து விட்டார்கள்.

அப்போது அபார்ஷன் ஆன குழந்தை எடுத்து என் கணவரின் கையில் கொடுத்த போது அவர் கதறி அழுது விட்டார் என ஜூலி பேட்டி ஒன்றில் மிகவும் உருக்கத்தோடு பேசி இருந்தார்.

இப்படியான நேரத்தில் கர்ப்பமாக இருந்த ஜூலிக்கு அண்மையில் வளைகாப்பு விழா நடந்தது. இதை அடுத்து ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் ஜூலி.

10 வருடங்கள் குழந்தை இல்லாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிய ஜூலிக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இரட்டை குழந்தைகளை கொடுத்திருக்கிறார் கடவுள். இதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!