அப்படி இருக்கும்னு நெனச்சேன்.. ஆனா இப்படிதான் இருக்குமா.. அதிர்ச்சியில் காவ்யா அறிவுமணி..!

Author: Rajesh
20 March 2023, 9:45 pm

பாரதி கண்ணம்மா சீரியலில் சிறு துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், விஜே சித்ராவின் மறைவிற்கு பின்னர், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சாயலில் நயன்தாரா போல இருக்கும் காவ்யா, ஒரு மாடல் அழகியும் கூட. பிரபல புத்தகங்களின் அட்டைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வரும் இவர், தனது ஸ்டைலிஷ் மாடர்ன் லுக்கில் போட்டோஸ்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

விரைவில் வெள்ளித்திரையில் அடிவைக்க போகும் காவ்யா, ஒரு சில திரைப்படங்களில் கமிட்டானதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதோடு அடிக்கடி போட்டோசூட் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் தாலியை கையில் வைத்துக் கொண்டு திருமணம் ஆன பின் வாழ்க்கை நாம் நினைக்கும் போது எப்படி இருக்கும்.. ஆனால் உண்மையில் எப்படி இருக்கும் என்பதனை பிரதிபலிக்கும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?