பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான். பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார்.
இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடிகை கிருத்திகா நடித்து இருந்தார்.
இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். இவர், அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தும் வருகிறார்.
சமீபத்தில் அடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்தும் மகன் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 கிலோ எடை இருந்தேன். அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
ஆனால், என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து எப்படி இருக்க பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்து விட்டோம் என்று கிருத்திகா பகிர்ந்திருந்தார். மேலும், தனக்கு ஒரு மகன் இருப்பதால் யாராவது தந்தை பற்றிய விவரமும் கேட்டால் அவன் மனம் கஷ்டப்படும்.
ஆனால், தற்போது அந்த கவலை இல்லை என்றும், தனது அண்ணன் இவனுக்கு அப்பா ஸ்தானத்திலிருந்து வழிநடத்தி வருவது வருவதாகவும், தன்னுடைய அண்ணனுக்கு தன் மகனை தத்து கொடுத்து இருப்பதாகும். அதனால், தனக்கு எந்த கவலையும் தற்போது இல்லை என்று கிருத்திகா தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.