6 மாசம் Adjustment .. உண்மையை உடைக்கும் பாண்டியன் ஸ்டோர் லாவண்யா..!

Author: Vignesh
3 November 2023, 12:29 pm

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடியது. இதில் சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்ற பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

lavanya -updatenews360

தற்போதைய நிலவரப்படி ஜீவா – மீனா மற்றும் கண்ணன் – ஐஸ்வர்யா இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கதைகளம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லாவண்யா இதற்கு முன்னதாக, சிற்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

lavanya -updatenews360

இந்நிலையில், தற்போது ரேசர் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லாவண்யா காஸ்டிங் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு என்னுடன் காண்ட்ராக்டில் இரு என்று சொன்னார். மேலும், அவர் ஆறு மாதம் ஒன்றாக இருப்போம் அதுக்கு மேல் வேண்டாம். அந்த மாதிரி என் கூட இருந்தா நீ பெரிய லெவலுக்கு போயிடுவ மீடியாவில் வேலை செய்த மூன்று பெண்கள் என்னுடன் அப்படித்தான் இருந்தார்கள். இப்போ அவங்க கிட்ட கார் வீடு என செட்டில் ஆகிவிட்டனர். காஸ்டிங் இயக்குனரின் அந்த பேச்சுக்கு நான் ஏதும் பதில் அளிக்கவில்லை அமைதியாக இருந்துவிட்டேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று லாவண்யா தெரிவித்துள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!