பிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… கொட்டி குவியும் வாழ்த்துக்கள்!
Author: Shree15 July 2023, 8:40 pm
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையான நக்ஷத்திரா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். பார்ப்பதற்கு மிகவும் குடும்ப பாங்கான தோற்றத்தில் கிராமத்து பெண் போன்று நடித்து இல்லத்தரசிகளின் மனத்தில் நல்லதோர் இடத்தை பிடித்தார்.
இதையடுத்து கடந்த வருடம் தனது காதலை மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவ்வப்போது சீரியல் நடிகைகளும் தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிடுவார். வளைகாப்பு விழா போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் தற்ப்போது நக்ஷத்திராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதை புகைப்படத்துடன் வெளியிட்டு அறிவித்துள்ளார். இதையடுத்து நக்ஷத்திராவுக்கு சீரியல் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.