“அந்த பாட்டுல ஹீரோயினுக்கு பதிலா விஜய் சாரோட நான் டூயட் ஆடுனேன்”: நீபா Open Talk ..!
Author: Rajesh13 August 2023, 10:59 am
சிறு வயது முதலே சீரியல் தொடர்கள், திரைப்படங்கள் என நடித்து அதன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை நீபா. இவர் பிரபல நடன கலைஞர்கள் வாமன் மற்றும் மாலினியின் மகள். துணை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ள இவர், மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்.

பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காவியாஞ்சலி என்னும் தொடர் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த இவர், விஜய் டிவி, சன் டிவி என பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். காவலன், பேரன்பு, கபடதாரி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர், நடிக்காமல் இருந்து வந்த இவர், தற்போது, ஜீ தமிழ் நடத்தும் ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் தனது மகளுடன் பங்கேற்றார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் உடன் பணியாற்றியது குறித்து அவர் பேசிய சில தகவல்கள் செம வைரலாகி வருகிறது.
அப்போது பேசிய அவர், “‘காவலன்’ படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே விஜய் சார் உடன் நான் வொர்க் பண்ணியிருக்கேன். ஸ்ரீதர் மாஸ்டர்கிட்ட அசிஸ்ட்டென்டா இருந்தப்போ, புதிய கீதை’ படத்துல
மெர்க்குரி பூவே’ பாட்டுல வொர்க் பண்ணுனேன். அப்போ, நான் ரொம்ப சின்னப் பொண்ணு. மீரா ஜாஸ்மின் மேடம் ஆடவேண்டிய டான்ஸ் மூவ்மென்ட்டை, அவங்களுக்கு நான்தான் ஆடிக் காட்டுவேன். அதுமட்டுமில்ல, டூயட்டுங்கிறதால, விஜய் சாரோட சேர்ந்தும் ஆடிக் காட்டுவேன்.
ஷூட்டிங் முடிஞ்சோன விஜய் சாரோடு ஓடிப் பிடிச்சு விளையாடுவோம். அதுக்கப்பறம் கிட்டத்தட்ட 8 வருஷம் அப்புறம் காவலன்’ ஷூட்டிங்கில தான் பார்த்தேன். அதுக்கு நடுவுல அவரைப் பார்க்கவே இல்ல. என்னை ஞாபகம் இருக்குமான்னு தெரியாமத்தான் பேசப்போனேன். என்னைப் பார்த்தோன,
உன் பேரு பிரியாதானே.. ஏன் நீபானு மாத்திக்கிட்ட’னு கேட்டார்.
எனக்கு செம ஷாக். `உங்களுக்கு இன்னும் என்னை ஞாபகம் இருக்கா’னு கேட்டேன். அப்போதான் புரிஞ்சது, பெரிய லெவலுக்குப் போன எந்த ஒரு நடிகரும் பழசை மறக்க மாட்டாங்க. அதுனாலதான் அவங்க அந்த லெவல்ல இருக்காங்கன்னு.” என நீபா பேசியுள்ளார்.