திருமணமான 3 வருடத்தில் விவாகரத்து.. நிறைமாத கர்ப்பிணியான சீரியல் நடிகை!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2024, 10:41 am

சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் திருமணம் செய்வது, விவகாரத்து செய்வது, இன்னொரு திருமணம் செய்வதெல்லாம் சாதாரணமாகிவிட்டது.

வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நிவேதிதா பங்கஜ். இவர் நடிகர் எஸ்எஸ்ஆர் பேரன் ஆர்யனை காதலித்து திருமணம் செய்தார்.

நிவேதிதா கல்யாணப்பரிசு, மகராசி, சுந்தரி போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். மகராசி சீரியலின் போதுதான் உடன் நடித்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்தார்.

இதையும் படியுங்க: முதன் முறையாக மகளின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரித்திகா – குவியும் லைக்ஸ்!

பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டு குடும்பத்தை கவனித்தார். ஆனால் இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை. மீண்டும் நடிக்க தொடங்கினார்.

இதையடுத்து திருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்த சுரேந்திரனுடன் காதல் வயப்பட்டார். இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீர் திருமணமும் செய்து கொண்டனர்.

அப்போதுதான் நிவேதிதா, தனக்கும் ஆர்யனுக்கு விவாகரத்து ஆகி 3 வருடங்கள் ஆனதாக கூறினார். தற்போது சுரேந்திரன் மலர் சீரியலில் நடித்து வருகிறார்.

மகராசி சீரியலில், சுரேந்திரனுடன் நடித்த போது காதல் வயப்பட்டதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக கூறினார்.

பிப்ரவரி மாதம் திருமணம் நடந்த பின், தற்போது நிவேதிதா 9 மாதம் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்து கணவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்தார்.

ஆர்யனும், மகராசி சீரியலில் நடித்த நடிகை ஸ்ரீருத்திகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?