பிரபல சீரியல் நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி.. இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?..

Author: Vignesh
17 February 2024, 5:01 pm

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டினார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

nivisha-updatenews360

ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா.

nivisha-updatenews360

முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியல் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வந்த நிவிஷா தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த சீரியலில் இருந்தும் விலகிவிட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நிவிஷா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருக்கிறேன். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறது. விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நிஷா பதிவிட்டுள்ளார். அந்த பதிவை இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

nivisha-updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 366

    0

    0