ஊரு சனம் தூங்கிருச்சு… ஆனா, எங்க தூக்கத்த கெடுத்துட்டீங்களே… சீரியல் நடிகை வெளியிட்ட Recent Video..!!

Author: Babu Lakshmanan
24 March 2022, 9:49 am

சித்தியின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.

இந்த நிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். ஆனால் சீரியல் மக்கள் மத்தியில் பெரியதாக போகவில்லை. தற்போது சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் சித்தி 2 சீரியலில் நடிக்கும் ப்ரீத்திக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சினிமா பட நடிகைகளின் ரேஞ்சுக்கு சூப்பராக கவர்ச்சி காட்டி வருகிறார்.

தற்போது, சீரியல் சூட்டிங்கிற்கு நடுவே, இடுப்பு தெரியும்படி, ஊரு சனம் தூங்கிருச்சு பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு இந்தத் திறமை கூட இருக்கா…? என்று கேள்வி எழுப்பியும், பாராட்டியும் வருகின்றனர்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 2075

    0

    0