சினிமா தொழில் பாலியல் தொழில் ஆகிடுச்சு… திரைத்துறையில் நடப்பதை புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை!

Author: Shree
31 August 2023, 6:45 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.

இது வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையும் கூட தானாம். ஆம், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் நடித்து பிரபலம் ஆன நடிகை பிரியங்கா படவாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைத்து குறித்து கோபமாக பேசியுள்ளார்.

இது குறித்த பேட்டியில், சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் நிறைய நடக்கிறது. இப்போ எல்லாம் அது சர்வ சாதாரணமான விஷயமாகிடுச்சு. ஒளிவுமறைவு இல்லாமல் ஸ்ட்ரைட்டாகவே கேட்கிறார்கள். சினிமா மட்டும் இல்லாமல் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் இப்படி தான் புகார்கள் வருகிறது. அதையெல்லாம் கேட்கும்போது கோபம் தான் வருகிறது.

இதுபோன்ற பிரச்சனைகளால் பெண்பிள்ளைகளை பெற்றோர்கள் சினிமாவிற்கு அனுப்ப தயங்குகிறார்கள். முதலில் அவரவர் தங்கள் வீடுகளிலே ஆண் பிள்ளைகளை பெண்களை மதிக்கச் சொல்லி வளர்க்க வேண்டும். அங்கிருந்து தான் இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டவேண்டும். மேலும், பெண் பிள்ளைகள் எந்த பிரச்சனையையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சீரியல் நடிகை பிரியங்கா கூறியுள்ளார். நடிகை பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 664

    1

    1