சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்..
இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்
இந்நிலையில், புதுமுக நடிகர்களை கொண்ட இந்த ரோஜா தொடர் வெற்றிகரமாக ஓடி கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. பின்னர் பிரியங்கா ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீதாராமன் என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வந்தார். இடையில் நீண்ட நாள் கழித்து காதலரை திடீரென மலேசியா கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்த நிலையில் சீதாராமன் தொடரில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். கடைசியாக சீதாராமன் கெட்டப்பில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதுதான் என்னுடைய கடைசி சீதா கெட்டப் என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் வருத்தம் அடைந்து நல்ல கதாபாத்திரம் ஏன் நின்று விட்டீர்கள் என புலம்பி வருகின்றனர்.
பிரியங்காவின் இந்த பதிவை பார்த்த மற்ற தரப்பினர் டிஆர்பி அதிகரிக்க செய்யும் புதிய யுக்தி எனவும், சீரியலில் டிஆர்பி குறைந்ததால் இப்படி விலகப் போவதாக சொல்லிவிட்டு பின்னர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து பின் மீண்டும் சீரியலில் தான் நடிக்கிறேன் என்று சொல்வார்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர். இப்படித்தான் ரோஜா சீரியலின் போது சிபுவு செய்தார் என்று கலாய்த்து வருகின்றனர்.
மேலும் சிலர் கணவரிடம் இருந்து வந்த டார்ச்சர் தான் இதற்கு காரணம் அதனால் தான் சீரியலை விட்டு பிரியங்கா விலகுவதாகவும் தெரிவித்து வருகின்றனர். எனவே, திருமணத்தால் பிரியங்கா இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.