புதிய தொழிலில் கல்லா கட்டும் பிரியங்கா நல்காரி.. ஆரம்பத்திலே ஓஹோன்னு கொட்டும் வருமானம்..!
Author: Vignesh11 June 2024, 1:23 pm
சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்..
மேலும் படிக்க: மாடலிங் TO ஹீரோயின்.. நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுக்கும் ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு..!
இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் படிக்க: தாய் பாசத்துல நயன் செய்யும் அலப்பறை.. அபார்ட்மெண்டையே காலி செய்தது இதனால் தானா?..
இந்நிலையில், புதுமுக நடிகர்களை கொண்ட இந்த ரோஜா தொடர் வெற்றிகரமாக ஓடி கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. பின்னர் பிரியங்கா ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீதாராமன் என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வந்தார். இடையில் நீண்ட நாள் கழித்து காதலரை திடீரென மலேசியா கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
மேலும் படிக்க: Titanic பட நடிகர் திடீர் மரணம்.. ஹாலிவுட்டில் சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இந்த நிலையில் தெலுங்கு சீரியல்களில் நடிக்கும் இவர் தற்போது ஜீ தமிழில் நள தமயந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் கமிட்டாகி நடித்து வந்தவர். சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது, நடிகை பிரியங்கா நல்காரி தனது கணவருடன் இணைந்து புதிய விஷயத்தை தொடங்கியுள்ளார்.
மேலும் படிக்க: சம்திங் சம்திங்கா?.. பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி.. வைரலாகும் போட்டோ..!
அதாவது அவர் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை அவரது கணவருக்காக ஆரம்பித்துள்ளார். அதற்கு அண்மையில், பூஜையில் போட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, அந்த உணவகத்தில் பில் போடும் வேலையை அவர் செய்து வருவது போல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், இந்த தொழிலில் அதிக லாபம் கிடைப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால், ரசிகர்கள் சீரியலில் நடிப்பதை தாண்டி இந்த வேலையை தொடங்கிவிட்டாரா என கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.