புதிய பிசினஸில் இறங்கிய நடிகை பிரியங்கா… அவரே வெளியிட்ட போட்டோ..!
Author: Vignesh27 October 2023, 11:41 am
சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்..

இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்
இந்நிலையில், புதுமுக நடிகர்களை கொண்ட இந்த ரோஜா தொடர் வெற்றிகரமாக ஓடி கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. பின்னர் பிரியங்கா ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீதாராமன் என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வந்தார். இடையில் நீண்ட நாள் கழித்து காதலரை திடீரென மலேசியா கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இப்போது, மீண்டும் ஜீ தமிழிலேயே தமயந்தி என்ற தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகிவிட்டார். புதிய தொடரில் கமிட்டாகியுள்ள பிரியங்கா இப்போது புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கியுள்ளார். அதற்காக அவர் தனது கணவருடன் பூஜை போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.