புரியாத புதிரா உங்க அழகு… வர்ணிக்கும் ரசிகர்கள் : சீரியல் நடிகை ரச்சிதா Latest Cute Photos..!

Author: Rajesh
1 April 2022, 11:43 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.

தற்போது கண்ணாடி முன் Cute Expressions கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்க அழகு புரியாத புதிரா இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி