தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.
இதனிடையே, ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து பெரும் சூழ்நிலையில் ரக்ஷிதாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார்.
அதேபோல் உப்பு கருவாடு, மெய் நிகரே, ஃபயர் போன்ற தமிழ் படங்களிலும் சில கன்னடப் படங்களிலும் ரக்ஷிதா நடித்துள்ளார். இதற்கிடையில், ரக்ஷிதா, தினேஷ் விவாகரத்து பிரச்சனையும் ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரக்ஷிதா மகாலட்சுமி கையில் துப்பாக்கியுடன் காவல்துறை கெட்டபில் ஆவேசமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அடுத்த தமிழ் பாடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருப்பதாக ரக்ஷிதா அறிவித்துள்ளார். அதோடு, கண்டதை எல்லாம் வைரல் ஆக்குவதைவிட இதை ஆக்குங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.