பிரபல சீரியல் நடிகையான ரேகா நாயர் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் தன்னுடைய தோழியும் சீரியல் நடிகையுமான வி.ஜே சித்ராவின் மரணத்தை குறித்தும் அதில் மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்தும். YouTube சேனல்களுக்கு பேட்டி கொடுத்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரேகா நாயர் சர்ச்சைக்குரிய நடியாக பார்க்கப்பட்டார். இந்த படத்தில் அவர் அரை நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படத்தில் நடித்ததை பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயரை கடுமையாக விமர்சித்தார். இதனால் நேராக நாயர் பயில்வனாணை நடுரோட்டில் இழுத்து அடித்ததெல்லாம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரேகா நாயரின் கார் விபத்துக்குள்ளானதில் 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அடுத்து இந்த விபத்தை சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார் அந்த கார் ஓட்டுநர் பாண்டியன் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது சீரியல் நடிகை ரேகா ஞாயிறு கார் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த காரை பறிமுதல் செய்த போலீசார் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த விசாரணைக்கு நடிகை ரேகா நாயர் வந்து ஆஜராகும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.