அந்த மூடில் இருந்தால் அமைதியாக இருக்க முடியாது.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
23 February 2024, 3:07 pm

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

reshma pasupuleti - updatenews360

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது, பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

reshma pasupuleti - updatenews360

இந்நிலையில், பேட்டியில் கலந்து கொண்ட ரேஷ்மா எனக்கு பாக்கியலட்சுமி சீரியலில் மற்ற நடிகர்களுடன் காம்பினேஷன் காட்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால், யூனிட்டுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். கோபி குறிப்பாக ஒளிப்பதிவாளர் முத்து மிகவும் கலகலப்பாக இருப்பார். நான் எப்போதும் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவள் கிடையாது. ஜாலியான மூடில் இருக்கும் போது அமைதியா எல்லாம் இருக்க முடியாது. நான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்ள ஏதாவது, செய்து கொண்டே இருப்பேன் என்று ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 274

    0

    0