சாம் ஆண்டர்சனை நினைவுபடுத்திய ரோஷினி ஹரிப்ரியனின் குத்து டான்ஸ்.. Hot video..!

Author: Rajesh
11 February 2022, 12:30 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு பாதி காரணம், அந்த நாடகத்தில் வரும் கண்ணம்மா என்ற கதாபாத்திரம் ரொம்ப நாட்களாக நடந்து கொண்டே இருப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.

அதை மீம் க்ரியேட்டர்கள் எடுத்து கன்னாபின்னாவென ஓட்ட, நாடகம் மட்டுமில்லாமல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியனும் புகழ் அடைய ஆரம்பித்தார். மாடலிங் துறையில் இருந்து வந்த ரோஷினி அதன்பின் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சிறிது நாட்களுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். ஆனால் இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

https://vimeo.com/676175052

தற்போது  நீச்சல் குளம் அருகே டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சாம் ஆண்டர்சனை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி