அச்சச்சோ என்னாச்சு.. கணவர் தாக்கிவிட்டாரா? முகத்தில் காயத்துடன் சீரியல் நடிகை சமீரா ஷெரீப்..!
Author: Vignesh16 September 2023, 3:00 pm
பகல் நிலவு, றெக்கை கட்டி பறக்குது மனசு, உள்ளிட்ட பல்வேறு சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் சமீரா ஷரீப். இவர் இன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இந்நிலையில், முகத்தில் காயத்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமீரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதனைப் பார்த்து அதிர்ச்சியாகிய ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். கணவர் தான் தன்னை தாக்கி விட்டார் என எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால், நிஜம் என்ன என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள்.

இந்த காயத்திற்கு காரணம் என்னுடைய மகன்தான் என தெரிவித்திருக்கிறார். மேலும், திருமணம் ஆன புதிதில் உறவினர் குழந்தைகளுடன் விளையாடும் போது கூட சில காயங்கள் உடலில் ஏற்படும். அதனைப் பார்த்து கூட எல்லோரும் தன்னுடைய கணவர் தான் தன்னை தாக்கிவிட்டார் என நினைத்து கேட்பார்கள். எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் முடிவு செய்யாதீர்கள் என சாமீரா எல்லோருக்கும் அட்வைஸ் ஆக தெரிவித்திருக்கிறார்.