24 மணி நேரமும் அதுதான் வேணும்.. மாதவிடாய்-னு கூட பாக்காம.. சம்யுக்தா கொடுத்த விளக்கம்..!
Author: Vignesh15 May 2023, 11:10 am
சீரியல் நடிகை சம்யுக்தா திருமணம் ஆன ஒரு மாதத்தில் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளநிலையில், இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பலர் இது குறித்து விஷ்ணுகாந்திடம் கேட்க எல்லாம் விரைவில் தெரியவரும் என்று அவர் பதில் அளித்துள்ளார். இந்நிலையில் இதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்குவதை போல் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தங்களின் பிரிவு குறித்து யூடிப் பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணுகாந்த், எங்களின் பிரிவுக்கு காரணம் சம்யுக்தாவின் தந்தை தான் என தெரிவித்திருந்தார். திருமணத்திற்கு முன்பு எட்டு மாதங்கள் காதலித்த சமயத்தில் வராத பிரச்சனை, திருமணமான 15 நாட்களில் ஏற்பட்டதாகவும் கூறினார். விஷ்ணுகாந்தின் பேட்டியை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சம்யுக்தா, பேட்டியில் அவர் பகிர்ந்திருந்த அனைத்து தகவலுக்கும் பதிலளித்தார்.
திருமணத்திற்கு முன்பிலிருந்தே தங்களுக்குள் பிரச்சனைகள் துவங்கிவிட்டதாகவும், எனக்கு ஒன்று என்றால் என் அப்பா தான் வருவார். வேறு யார் வருவார் என்றும் தெரிவித்திருந்தார். இப்போது கூட அவருடைய ஆட்கள் லைவில் தவறாக கமெண்ட் பண்ணுவதாகவும், இதற்கு மேல் எதுவாக இருந்தாலுல் போலீஸ் ஸ்டேஷன் அல்லது கோர்ட்டில் பேசி கொள்ளலாம் என்றும் கூறினார் சம்யுக்தா.
மேலும் யூடிப் சேனல்களுக்கு பேட்டியளிக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 100 போன் கால்களுக்கு மேல் வருகிறது. அவர்களுக்கு பேட்டியளித்து என் நிலைமையை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. தயவுசெய்து என்னை யூடிப் சேனல்கள் யாரும் பேட்டி கொடுக்க அழைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். சம்யுக்தா லைவில் பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.