சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.
அந்த வரிசையில், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் – நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை.
இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களது திருமண வாழ்க்கை வெறும் முப்பது நாட்களைக் கூட தாண்டவில்லை.
தற்போது இருவரும் விவாகரத்து செய்வதற்காக சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு வந்தனர். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது திருமண பிரச்சினை முடிந்து அவரவர் தங்களது பணியை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை சம்யுக்தா புதிய கார் ஒன்றை வாங்கி அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, குறைக்கிற நாய் குறைக்கட்டும் தனியா ஒரு பெண் சுதந்திரமாக உழைத்து முன்னேறுவது இந்த சமூகத்தில் சாதாரண விஷயம் இல்லை. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி என பதிவிட்டுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.