என்கிட்ட Propose பண்ணிட்டு… வேறு ஒருத்தார் கூட.. ஆடியோ ஆதாரங்களை வெளியிட்ட விஷ்ணுகாந்த்..!

Author: Vignesh
18 May 2023, 4:00 pm

சீரியல் நடிகை சம்யுக்தா திருமணம் ஆன ஒரு மாதத்தில் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது.

samyuktha vishnukanth-updatenews360

இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

vishnukanth samyuktha-updatenews360

இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளநிலையில், இருவரும் சமூகவலைதளங்களில் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இதனிடையே, பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணுகாந்த், தங்களின் பிரிவுக்கு காரணம் சம்யுக்தாவின் தந்தை தான் என தெரிவித்திருந்தார். மேலும், இதற்கு மேல் எதுவாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் அல்லது கோர்ட்டில் பேசி கொள்ளலாம் என்றும் சம்யுக்தா வீடியோவில் கூறினார்.

vishnukanth samyuktha-updatenews360

இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் விஷ்ணுகாந்த் நேர்காணல் கொடுத்தார். அதற்கு சம்யுக்தா இன்ஸ்டாகிராம் லைவில் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷ்ணுகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், “இவனை முடக்க வேண்டும். இவனை வெளியே விடக்கூடாது என்று பயங்கரமாக பிளான் செய்து பண்ணுவது போல சம்யுக்தா செய்கிறீர். சம்யுக்தா தவறான பாதையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்றும், தன்னிடம் இருக்கக்கூடிய சான்றுகள் எல்லாத்தையும் தான் வெளியே விட்டால் உங்கள் வாழ்க்கையே காலி ஆகிவிடும். 24 மணி நேரமும் நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எந்த ஒரு மனிதனாலும் அப்படி இருக்க முடியாது. தனக்கு அந்த ஆடியோவை ரிலீஸ் பண்ண ரொம்ப நேரம் ஆகாது என்று விஷ்ணுகாந்த் வீடியோவில் பேசினார்.

மேலும், அவர் தனக்கு வேணும் அப்படினு பேசல அவரின் வாழ்க்கைகாகத்தான் பேசுகிறேன் என்றும், தன்னிடம் ப்ரபோஸ் செய்துவிட்டு அதை ரிவீல் செய்யுற வரைக்கும் ஒருத்தரிடம் பேசிக்கிட்டு இருக்கியே அதை நீயே உன் வாயால் சொல்லிவிடு என்று கூறியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 994

    5

    5