ஆடிஷன் எல்லாம் வேண்டாம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுங்க.. அந்த 10 நிமிஷம்.. சீரியல் நடிகை கதறல்..!
Author: Vignesh11 May 2024, 5:54 pm
சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.
அந்த வரிசையில், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் – நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை.
மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!
இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களது திருமண வாழ்க்கை வெறும் முப்பது நாட்களைக் கூட தாண்டவில்லை.
மேலும் படிக்க: பிரபல நடிகையுடன் வருட கணக்கில் ரகசிய உறவு?.. KS ரவிக்குமார் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!
தற்போது இருவரும் விவாகரத்து செய்வதற்காக சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு வந்தனர். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது திருமண பிரச்சினை முடிந்து அவரவர் தங்களது பணியை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பது பற்றி பகிர்ந்துள்ளார். அதில், என்னிடம் சீரியலில் இருந்து அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு யாரும் அழைக்கவில்லை. படங்களில் நடிக்க மூன்று முறை அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள். மூன்று படங்களின் வாய்ப்பு வந்தது. மூன்றிலும் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்க செய்தார்க.ள் இரண்டு நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதில், இரண்டு கால் எனக்கு வந்தது. ஒரு கால் என் அம்மாவுக்கு செய்திருந்தார்கள்.
காஸ்டிங் இயக்குனர்களிடம் என் நம்பரும் என் அம்மா நம்பரும் கொடுப்பேன். அப்படி அம்மாவுக்கு பெரிய ஹீரோவின் பெரிய கம்பெனி படத்திலிருந்து கால் வந்தது. அந்த படம் குறித்த பெயரை தற்போது, நான் வெளியிட விரும்பவில்லை. சம்பளம் எல்லாமே பேசினாங்க, எங்கே வரணும் ஆடிஷன் பண்ணனுமா என்று அம்மா கேட்டிருக்கிறார். அந்த பத்து நிமிஷத்தில், நான் அந்த ஹீரோவுடன் நடிக்கப் போகிறேன் என்ற கனவுலகத்திற்கு சென்றுவிட்டேன்.
ஆனால், ஒரு நொடியில் சுக்கு நூறாக என் கனவு கலைந்து விட்டது. ஆடிஷன் எல்லாம் பண்ண வேண்டாம், அட்ஜஸ்ட்மென்ட் பண்ணீங்கன்னா அடுத்த நாளே ஷூட்டிங்க்கு போயிடலாம் என்று கூறியிருந்தார்கள். ஆரம்பத்தில், அம்மாவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்றால் என்ன என்று புரியவில்லை. இன்னொரு முறை அப்படி கேட்டதும் புரிந்தது. பின்னர், அம்மா வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று சம்யுத்தா தெரிவித்துள்ளார்.