இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான சம்யுக்தா..- அவரே வெளியிட்ட புகைப்படம்..!
Author: Vignesh24 June 2023, 12:30 pm
சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.
அந்த வரிசையில், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் – நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை.
இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களது திருமண வாழ்க்கை வெறும் முப்பது நாட்களைக் கூட தாண்டவில்லை.
தற்போது இருவரும் விவாகரத்து செய்வதற்காக சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், மீண்டும் மணக்கோலத்தில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் மீண்டும் திருமண ஆசையா?.. அவரை எப்போது விவகாரத்து செய்வீர்கள் என கருத்துக்களை அள்ளி வீசி வருவது குறிப்பிடத்தக்கது.