வீட்டுல இருக்குற அதை கூட திருடிட்டு போறாங்க.. வேதனையுடன் வீடியோ வெளியிட்டு புலம்பிய மாஸ்டர் பட நடிகை..!
Author: Vignesh12 June 2023, 3:42 pm
உலகின் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் கொலை சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் அளித்திருந்த புகார் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகை சங்கீதா விஜயின் மாஸ்டர், வீட்ல விசேஷம் உள்ளிட்ட ஒரு சில படங்களை நடித்திருக்கிறார்.
மேலும் சில சீரியல்களிலும் கலக்கி இருக்கிறார். இவர் எப்போதும் அவர் வீட்டின் முன்பு விடும் செருப்பு அடிக்கடி காணாமல் போவதால் சிசிடிவி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.
அப்போது இரண்டு பேர் வீட்டின் முன் இருக்கும் காலணிகளை லிப்ட் உள்ளே தள்ளிவிட்டு அதன் பின்னர் திருடிக் கொண்டு செல்வது வாடிக்கையாக வைத்திருந்தனர்.
அவர்கள் சொகுசு பைக்கில் வந்து திருடியதும் அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனை நடிகை சங்கீதா தற்போது வெளியிட்டு போலீசிலும் புகார் அளித்திருக்கிறார்.