கணவர் சஞ்சீவ் உடன் விவாகரத்து?.. பழிவாங்காமல் விடமாட்டேன், ஆல்யா மானசாவுக்கு என்ன ஆனது?
Author: Vignesh16 February 2024, 1:39 pm
சின்னத்திரையில் நுழைந்த சில காலங்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன இவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.
பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆல்யா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். அண்மையில் தான் இரண்டாவது மகன் பிறந்தார், குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆல்யா மானசாவின் உடல் எடையும் அதிகரித்தது. முன்னதாக, புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் ஆல்யா 2 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஆல்யா இனியா சீரியலிலும், நடிகர் சஞ்சீவ் கயல் என்ற தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களும் சன்டிவியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆல்யா விவாகரத்து செய்தி வரும் போதெல்லாம், நாங்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்போம். பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கப் போவது இல்லை. அதேபோல், கூடவே இருந்து சிலர் ஏமாற்றுவதை பார்த்து ஆரம்பத்தில் கோபப்பட்டு இருந்தேன். பழிவாங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைப்பேன் இப்போது அந்த சிந்தனை இல்லை என பேசியுள்ளார்.