சித்ரா மரணம்… நடந்தது என்ன ? அந்த காட்சியை சமாளிக்க முடியவில்லை… உண்மையை உடைத்த நெருங்கிய தோழி..!

Author: Vignesh
10 December 2022, 10:19 am

சின்னத்திரை தொலைக்காட்சியில் விஜே சித்ரா தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சீரியல் நடிகையானவர். முல்லை என்ற கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு பெற்று வந்தார்.

ஹேமந்த் என்பவரை கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். விஜே சித்ரா மர்மமான முறையில் திருமணமாகி ஒருசில மாதங்களில் டிசம்பர் 9 ஆம்தேதி அவர் தங்கிய ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

VJ-Chitra-6-Updatenews360

இதற்கு காரணம் கணவர் ஹேமந்த் தான் என்று ஒருசிலரும் பின்னணியில் இருக்கிறார்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் விஜே சித்ராவின் தோழியும் நடிகையுமான சரண்யா பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒருசில பிரச்சனை ஏற்பட்டதாகவும் எந்த நேரத்தில் தான் லவ் பண்றேன் என்று கூறிய நாள் முதல் லவ் காட்சிகள் நெருக்கமான காட்சிகள் எடுப்பதாக சித்ரா என்னிடம் கூறினார்.

இதுகுறித்து சித்ராவின் அம்மாவும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். என்னால் சமாளிக்க முடியவில்லை. என் கணவர் இதனால் கோபப்படுகிறார் என்று கூறியதாகவும் அவர் உன்னை புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சீரியலில் லவ் காட்சிகள் பண்ணமாட்டேன் என்றும் என்னிடம் சித்ரா கூறினார் என தெரிவித்துள்ளார்.

saranya-1-updatenews360

இதனால் விஜே சித்ரா பயந்ததாகவும் அதை மறைத்து சிரித்தபடி இருந்தாள் என்று கூறியுள்ளார். அதற்கு நான் தைரியமாக அதை எல்லாம் டெலீட் செய்யுங்கள் என்று கூறியதோடு அவருடன் பேசிய ஆடியோ காலையும் போட்டுக்காட்டியுள்ளார். அத்தோடு அவள் என் மடியில் இருந்து அழுதாள். அதில் ஒரு வீடியோவை எனக்கு அனுப்பி அழுதால் என்று சரண்யா கூறியுள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!