இப்போவே டெலீட் பண்ணுங்க.. வீடியோவால் டென்ஷன் ஆன செம்பருத்தி சீரியல் நடிகை..!

Author: Vignesh
22 July 2024, 9:23 am

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறியவர் ஷபானா. செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலமாக இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் பிறகு, சன் டிவிக்கு சென்று மிஸ்டர் மனைவி என்ற தொடர் நடித்தார். அந்த தொடரில், இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டார். அதையடுத்து, ஷபானா எந்த புது சீரியலில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவர்கள் பல வருடமாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தனர். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், ஷபானா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், தகவல்கள் வந்தது.

இந்நிலையில், ஆரியன் தான் ஷபானாவை காதலித்து வந்த போது ரகசியமாக சந்தித்தபோது எடுத்த போட்டோ வீடியோவை வெளியிட்டதை பார்த்த ஷபானா டெலிட் பண்ணுங்க இதை கூறி இருக்கிறார். ஆனாலும் ஆர்யன் இந்த பதிவை நீக்கவில்லை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ