2 வயசு பொண்ணு கிட்ட… பண்ணாத டார்ச்சர் இல்லை…. அதனால்தான் விவாகரத்தை கொண்டாடினேன்!

Author: Shree
22 June 2023, 5:05 pm

திரைத்துறையை பொறுத்தவரை பல வருடங்கள் காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்ட நட்சத்திரங்களே பல வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் திருமணம், வாழ்க்கை , விவாகரத்து எல்லாம் சாதாரண பிரச்சனை போல் மாறிவிட்டது.

தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாக சைத்தன்யா போன்ற பிரபல ஜோடிகளின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் அவர்கள் எல்லோரும் இருவருமாக சேர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பின்னர் அதை பற்றி பெரிதுபடுத்திக்கொள்ளாமல் தங்களது வாழ்க்கையிலும் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு படி மேலே சென்றுள்ள பிரபல சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோ ஷூட்நடத்தி கொண்டாடினார். அதில் கணவருடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படத்தை கிழிப்பது, காலில் போட்டு மிதத்தல் , மது அருந்தியபடி தனக்கு டைவர்ஸ் கிடைத்ததை மகிழ்ச்சியை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டது செம ட்ரெண்டாகியது.

முள்ளும் மலரும் தொடர் மூலம் பாப்புலர் ஆன ஷாலினி சூப்பர் மாம் உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துக்கொண்டு இருக்கிறார். அவரது கணவர் ரியாஸ் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து பெற்றார். துபாயில் வேலை செய்துவந்த என் கணவர் என்னையும் என் குழந்தையையும் மிகவும் கொடுமைப்படுத்தினார். அவர் என் மகள் பிறந்த ஒரு வருடத்திலே, என் நண்பர்களை என்னிடம் இருந்து பிரித்தார், என் வேலையை விடச்சொன்னார். அவரை மட்டுமே நம்பி இருந்த சமயத்தில் திடீரென ஒருநாள் எங்களை பிரிந்துவிட்டார்.

நான் குழந்தை இடமாவது பேசுங்கள் என கெஞ்சி வீடியோ கால் பண்ணுவேன். ஒரு குறிப்பிட்ட நாள் இப்படியே சென்றது. பின்னர் அவர் எங்களை பிளாக் செய்துவிட்டார். என் மகள் அப்பா ஏன் போன் பண்ணல என தொடர்ந்து என்னிடம் கேட்டபோது இதுக்கு மேல் பொய்ச்சொல்ல முடியாது என்பதால் அவர் இறந்துவிட்டார் என கூறினேன். என்னை அடித்து துன்புறுத்தினார். அதனால் தான் போட்டோ ஷூட்டின் போது அவரது புகைப்படத்தை காலால் மிதித்து அதை கொண்டாடினேன் என வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால் ஷாலினிக்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 544

    1

    1