பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய நடிகை… சன் டிவி சீரியலுக்கு தாவல்..!!
Author: Udayachandran RadhaKrishnan30 November 2024, 9:57 pm
நாளுக்கு நாள் சீரியல்கள் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீரியலால் தொலைக்காட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் புது சீரியல், பிரபலங்களை நடிக்க வைத்து டிஆர்பியை அதிகரிக்க போட்டா போட்டி போட்டு வருகின்றன.
அதே போல ஒவ்வொரு சேனலில் நடித்து வரும் சீரியல் நடிகைகள் மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தாவி விடுகின்றனர்.
இதையும் படியுங்க: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. 50வது எபிசோடில் டுவிஸ்ட்!
அப்படித்தான் விஜய் டிவயில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகை விலகியுள்ளார்.ஜெனி ரோலில் நடித்து வந்த திவ்யா கணேஷ் சன்டிவி சீரியலுக்கு தாவியுள்ளார்.
சன்டிவியில் ஒளிபரப்பாகும் அன்னம் தொடரில் அவர் நடிக்க உள்ளார். ஏற்கனவே சன்டிவி சீரியலில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.