அட்ஜஸ்ட்மென்ட் அனுபவம் நிறைய இருக்கு.. அம்மா கிட்ட கேட்டு.. பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்..!
Author: Vignesh7 August 2023, 1:30 pm
தாரி என்ற சீரியல் மூலமாக கலர்ஸ் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் செந்தூர பூவே என்ற சீரியலில் விஜய் டிவியில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
தற்போது, தெய்வம் தந்த பூவே என்ற சீரியலில் ஸ்ரீநிதி நடித்த வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் சினிமாவில் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் சம்பவங்கள் குறித்து பேசி உள்ளார்.
அதில், ஸ்ரீநிதி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து தனக்கு நிறைய அனுபவம் இருப்பதாகவும், தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், படக்குழு தரப்பில் இருந்து தனக்கு அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு தான் வேண்டாம் என்றும் மறுத்து விட்டதால், அவர்கள் நீங்க வரலன்னா பரவால்ல அம்மா வந்தா கூட ஓகே என்று வெளிப்படையாக கேட்டதாகவும், இதைக் கேட்டவுடன் ஸ்ரீநிதியின் தாய் மிகவும் கோபம் அடைந்ததாக ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.