ஸ்ரீதேவி வீட்ல மீண்டும் குவா.. குவா.. லேட்டஸ்ட் பேபி பம்ப் கியூட் போட்டோஷூட்..!

Author: Vignesh
8 March 2024, 10:18 am

தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் சீரியல் நடிகை ஸ்ரீ தேவி. இவர் “புதுக்கோட்டையில் இருந்து சரவணன்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க அதை தவிர விடாமல் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதேவி செல்லமடி நீ எனக்கு, தங்கம், இளவரசி, கஸ்தூரி , பிரிவோம் சந்திப்போம், கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி, பொன்னி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இதனிடையே, அவர் தனது நீண்ட நாள் காதலரான அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சித்தாரா என்கிற அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருக்கும் ஸ்ரீதேவிக்கு சமீபத்தில் கணவர் அசோக் சிம்பிளாக சீமந்தம் நடத்தி அழகு பார்த்தார். இந்த நிலையில், ஸ்ரீதேவி அவரது லேட்டஸ்ட் பேபி பம்ப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

sridevi
sridevi
sridevi
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ