கல்யாணம் பண்ணி 4 வருஷத்துல Divorce.. சன் டிவி சீரியல் ஹீரோவை 2-ம் திருமணம் முடித்த நாதஸ்வரம் சீரியல் நடிகை..!

Author: Vignesh
13 June 2024, 7:09 pm

பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா சின்னத்திரை சீரியலில் நடிகையாக நடித்து பிரபலமானவர்களில் ஒருவர். இவர் நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாணப்பரிசு, அழகு மகராசி, சுந்தரி போன்ற சீரியல் நடித்த பிரபலமானார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்த சீரியல் என்றால் அது நாதஸ்வரம் சீரியல் என்று தான் கூற வேண்டும். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

srithika -updatenews360

அழகாய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரித்திகா நாதஸ்வரம் என்ற சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. மலேசியாவில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் குடியேறியது முதல் பக்கா சென்னை பெண்ணாகவே மாறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகையாக மட்டுமல்லாமல் தன்னை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் நிரூபித்திருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா. மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து இவருக்கு சில படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. சிறு பட்ஜெட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சீரியல் நடிகையான பின்பு ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக மாறினார்.

சீரியலில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் மாடர்னான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு காட்சி அளிக்கிறார். அந்த வகையில், தற்போதைய வெளியிட்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

srithika

இந்நிலையில், கடந்த 2020ல் சனீஸ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர். அவரைப் போல் சீரியல் நடிகர் ஆரியன் நடிகை நிவேதிதா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று இருந்தனர். சமீபத்தில் நடிகை ரித்திகா மூன்று வருடங்களுக்கு முன்பு தனக்கு விவாகரத்து ஆனதாகவும், விரைவில் மகராசி சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் ஆரியனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார்.

srithika

இந்நிலையில், இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ஆரியனுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வந்த இவர், விரைவில் சனீஸ் என்ற பெயரை instagram பக்கத்தில் இருந்து எடுத்துவிட்டு ஆரியன் பெயரை சேர்ப்பேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது, ஆரியனை திருமணம் செய்து கரம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா அவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

srithika
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!