பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மெட்டி ஒலி சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிகா.

அதனை தொடர்ந்து அவர் கலசம், முகூர்த்தம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம் என பல தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளிதிரையிலும் ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிரிப்பில் சினேகாவை மிஞ்சிடுவீங்க போல என வர்ணித்து வருகின்றனர்.